• Apr 01 2023

தி லெஜண்ட் படத்தில் விவேக் - மயில்சாமி...OTT இல் பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள்!!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'தி லெஜண்ட்'. முன்னதாக நிறைய விளம்பரங்களில் தோன்றி மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்த லெஜண்ட் சரவணன், 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கி இருந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ’தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

தி லெஜண்ட் திரைப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய சூழலில், அடுத்து ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.அந்த வகையில், கடந்த (03.03.2023) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ஓடிடி ரிலீஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது லெஜண்ட் திரைப்படம். 

இந்த நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள லெஜண்ட் படத்தில் உள்ள கலங்க வைக்க விஷயம் ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் மயில்சாமி, கடந்த சிவராத்திரி தினத்தில் இரவு கோவிலில் இருந்து விட்டு அதிகாலை வீடு திரும்பி இருந்த சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விஷயம், ஒட்டு மொத்த திரை உலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருந்தது. மயில்சாமிக்கு நெருங்கிய நண்பராக இருந்த நடிகர் விவேக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நல குறைவால் காலமாகி இருந்தார்.

சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள மயில்சாமி மற்றும் விவேக் ஆகியோர் சினிமாவை தாண்டியும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். பல தருணங்களில் ஒன்றாக இருந்துள்ள விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை என்பது பலரிடையே வருத்தமாகவும் உள்ளது.

     

அப்படி இருக்கையில், லெஜண்ட் படத்தில் விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் தோன்றி உள்ள காட்சிகள், அவரது ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் அவர்களின் காமெடியை பார்த்து சிரிக்கவும் செய்தார்கள்.


Advertisement

Advertisement

Advertisement