• Mar 28 2024

நிர்வாணப் புகைப்படங்களை நான் வெளியிடல.. என் மனைவி தான் லீக் பண்ணிட்டாங்க..பகீர் தகவலை கூறிய விஷ்ணு விஷால்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அவரின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. 


அதுமட்டுமல்லாது அவர்மீது மும்பையில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இவ்வாறாக ரன்வீர் சிங்கின் போட்டோஷூட்டுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், மறுபுறம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு சில பிரபலங்களும் இவ்வாறு போட்டோஷூட் நடத்தி தாறுமாறாக வெளியிட்டனர். 


அதில் குறிப்பாக நடிகர் விஷ்ணு விஷாலும் ஒருவர். படுக்கையறையில் அரை நிர்வாண கோலத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுவரை காலமும் இந்த போட்டோஷூட் பற்றி எந்தவித கருத்தும் ஓபனாக தெரிவிக்காமல் இருந்து வந்த விஷ்ணு விஷால் தற்போது பகீர் தகவல் ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். 


இதுதொடர்பாக அவர் கூறுகையில் "அது தான் வெளியிடவில்லை, லீக் செய்யப்பட்டு விட்டது" எனக் கூறி இருக்கின்றார். அத்தோடு அந்த போட்டோவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தான் எடுத்துவிட்டதாகவும், இருப்பினும் அதனை வெளியிடாமல் வைத்திருந்ததாகவும் கூறினார். 


மேலும் "ரன்வீர் சிங்கின் போட்டோஷூட் வெளியானபோது நீயும் உன்னுடைய போட்டோவை போட்டா என்ன எனக்கூறி எனது மனைவி ஜுவாலா கட்டா தான் அதை சமூக வலைத்தளங்களில் லீக் செய்துவிட்டார்" என விஷ்ணு விஷால் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement