• Dec 07 2022

தளபதி 67ல் வில்லனாக நடிக்க விஷால் வாங்கும் சம்பளம்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

கோலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களில்  ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.பீஸ்ட் படத்திற்கு பின்னர்  'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  மேலும்  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.



வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு வாரிசு முடித்தபின்னர் இந்த படத்தின் ஷூட்டிங்கை விஜய் உடனே தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஷாலை நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ். அது பற்றிய செய்தி சில தினங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

விஷால் ஹீரோவாக வாங்கும் சம்பளத்தை விட இந்த படத்திற்காக அதிகம் சம்பளம் வில்லனாக நடிக்க கேட்கிறார் என தகவல் கசிந்துள்ளது.விஷாலை 20 கோடி வரை சம்பளம் இந்த படத்திற்காக வாங்க இருக்கிறார் என தெரிகிறது.