• Apr 19 2024

தளபதி 67 இல் வில்லனாகும் விஷால்- கடுமையான பேச்சு வார்த்தையில் ஈடுபடும் லோகேஷ் கனகராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கின்றது.இப்படத்தில் ஏராளமான நட்சததிரப்பட்டாளமும் நடத்திவருகின்றனர்.

இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என்ற தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் தான் முடிவடைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது விஜய்யின் 67வது படம் என்பதாலும் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால் விக்ரம் படத்திதைப் போல இதுவும் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் எனறு நம்பப்படுகின்றது.அத்தோடு இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றது.


இப்படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாகவும், இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.மேலும் சமீபத்தில் வந்த ஒரு தகவல் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. அதாவது தளபதி 67 திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஷாலும் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. 

 ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்ற தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதை விட விஷால் தளபதி ரசிகன் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement