• Sep 21 2023

கை மீறிப்போன விசாலாட்சியின் நகை... உச்சகட்ட கோபத்தில் குணசேகரன்... இனி நடக்கப்போவது என்ன..? வெளியானது புதிய ப்ரோமோ..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி "அப்பத்தாவின் 40% ஷேரை நாம என்னைக்குமே எதிர்பார்க்கல என்று அப்பத்தாவிற்கு நல்லாவே தெரியும், நாங்க எல்லாரும் சுயமாய் முன்னேறணும் என அப்பத்தா எதிர்பார்க்கிறாங்க, அதற்கான வேலைகளை ஒவ்வொருத்தராக ஆரம்பிச்சிட்டோம்" என்கிறார்.


மேலும் "விசாலாட்சி எங்களுக்கு தொழில் செய்ய நகை முதலீடாகக் கொடுத்தது குணசேகரனுக்குத் தெரிந்ததற்கு அப்புறம் யாருக்காவது ஒருத்தருக்குத் தான் அந்த நகைகளை கொடுக்கணும் என்று ஆர்டர் போட்டார், விசாலாட்சி அத்தை மறுபடி நகைகளை எங்ககிட்ட கொடுத்தது இன்னும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கு" எனக் கூறிப் புலம்புகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. இதனையடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்துப் பொறுத்திருந்து பார்ப்போம்.     

Advertisement

Advertisement

Advertisement