விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் மட்டும் நம் மனதைவிட்டு மறைய மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர்தான் ஷிவானி நாராயணன்.
அதுமட்டும்லாது பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்கள். அந்தவகையில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் என இரண்டு நாடக தொடர்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். அத்தோடு விஜய் டிவியிலும் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சின்னத்திரையிலும் புகழ் பெற்றுள்ளார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் பிஸியான நடிகையாக மாறி விட்டார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் வாயிலாக தனது கவர்ச்சியை ரசிகர்களுக்கு அள்ளி வீசி வருகின்றார். இந்நிலையில் தற்போதும் இவர் மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஷிவானி உடல் எடை அதிகரித்துக் கொழு கொழுவென மாறி விட்டீர்கள்" எனக் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!