விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா, பழனிச்சாமி, இனியா, அமிர்தா, எழில், செழியன் உட்படப் பல கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஒவ்வொரு விதத்திலும் கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பழனிச்சாமியும், பாக்கியாவும் பேசும் போது கோபி கொடுக்கும் ரியாக்ஷன் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றது. பழனிச்சாமி பாக்கியாவிற்கு ரூட் விடுவதாக கோபி மனக் கோட்டையே கட்டி வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் ஈஸ்வரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். அவரிற்கு முன்னாள் பூ, வெற்றிலை, பழம் கொண்ட நிறையத் தட்டுக்களும் காணப்படுகின்றன.
இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஒருவேளை பழனிச்சாமியின் அம்மா பழனிச்சாமிக்காக பாக்கியாவை பொண்ணு கேட்க போயிருப்பாங்களோ" என்று நினைத்து அதனைக் கமெண்ட் வடிவில் பதிவிட்டும் வருகின்றனர்.
Listen News!