• Apr 25 2024

விஜய்க்கு விக்ராந்த் மட்டும் தம்பி இல்லை... இன்னொருவரும் இருக்கின்றார்... இதோ அவரின் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இதுவரை ஏறத்தாள 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். அந்தவாக்கியில் இவரின் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.


இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' என்ற படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய்க்கு விக்ராந்த் எனும் ஒரு தம்பி இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது விஜய்யின் சித்தி மகனான நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் தற்போது இருக்கின்றார்.


இந்நிலையில் நடிகர் விஜய்க்கு விக்ராந்த் மட்டுமே தம்பி இல்லை எனவும் அவருக்கு மற்றொரு தம்பியும் இருக்கிறார் என்பது குறித்த ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தவகையில் நடிகர் விக்ராந்தின் சகோதரர் பெயர் சஞ்சீவ். விஜய்க்கு தம்பி ஆவார். 


அதுமட்டுமல்லாது இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் விஜய் சேதுபதி எழுத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தை தற்போது சஞ்சீவ் தான் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement