• Jun 04 2023

ஆஸ்காருக்கு இலக்கு வைக்கும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் விக்ரம். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரிதாகியது.  

சமீபத்தில் கூட விக்ரம் பிறந்தநாள் அன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பில் விக்ரமுக்கு அடிபட்டது. ஆனால், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தங்கலான் படத்தை ஆஸ்கார் போட்டிக்கும், கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement