• Apr 20 2024

LEO LEO LEO தீம் மியூசிக்கிற்கு செம ஸ்டைலாக போட்டோ ஷுட் நடத்திய விக்ரமன்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது.21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தை சமூக நலவாதியும் அரசியல்வாதியுமான விக்ரமன் பெற்றார்.

விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆவார என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பலருக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆகவும் விக்ரமன் இருக்கின்றார்.


 மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் விக்ரமன் கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமன், புதிய போட்டோ ஷூட் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். 


லியோ படத்தில் இடம்பெற்ற லியோ லியோ லியோ பாடலை பிண்ணனியில் ஒலிக்க விட்டு போட்டோ ஷூட் வீடியோவை விக்ரமன் வெளியிட்டுள்ளார். கோட் சூட் அணிந்து நவநாகரீக தோற்றத்தில் விக்ரமனின் இந்த ஃபோட்டோ ஷூட் வீடியோ அமைந்துள்ளது. மேலும் ஒரு வீடியோவில் வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலை பிண்ணனியில் ஒலிக்கும் வகையில் மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement

Advertisement