• Apr 19 2024

தனலட்சுமிக்காக குரல் கொடுத்த விக்ரமன்- அசீமுடன் சேர்ந்து எகிறும் ஏடிகே- கலவர பூமியான பிக்பாஸ் வீடு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.வெிறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்பொழுது நீயும் பொம்மை நானும் பொம்மை என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அசீம் மற்றும் தனலட்சுமிக்கு இசையிலான மோதல் அதிகரித்துக் கொண்டே போகின்றது. போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை காப்பாற்றி வருகின்றனர்.இதில் ஷெரினாவிற்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். 


இந்த நிலையில், தனலட்சுமிக்காக ADK மற்றும் அசீம் ஆகியோரிடம் விக்ரமன் கேள்வி கேட்கும் வீடியோ, இன்னும் சலசலப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி உள்ளது. அதாவது விக்ரமன், "நீங்கள் அவ்வளவு பேசுகிறீர்கள். அந்த பொண்ணு உங்ககிட்ட வந்து நியாயம் பேசிட்டு இருக்குமா?" என கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் ADK, நீங்கள் கண்டிப்பது என்றால் அசீமை மட்டுமில்லாமல் அனைவரையும் கண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "நீங்க அறிவு இருக்கான்னு கேக்குறீங்க. உனக்கு என்ன Attitude, திமிரு இருக்கான்னு கேக்குறீங்க" என கேட்க, உடனடியாக அசீமும் அறிவு இருக்குறவங்க யாரும் தள்ள மாட்டாங்க என கொந்தளிக்கிறார்.பின்னர் தனலட்சுமி தள்ளியது உங்களுக்கு தெரியுமா, அறிவு இருக்கா இல்லையான்னு எப்படி கேட்கலாம் என்றும் விக்ரமன் சொல்ல அங்கு அடுத்த நிமிடமே கலவரம் ஆகிறது. பொம்மை டாஸ்க் பெயரில் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் சண்டை மேல் சண்டை தான் நடந்து வருகிறது.


இதனால், வார இறுதியில் கமல் வரும் போது தான் இதற்கு ஒரு தீர்வு வரும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் காத்திருந்து வருகிறார்கள்.அத்தோடு அசீம் தொடர்ந்து தனலட்சுமி மீது குற்றம் சுமத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement