• Feb 04 2023

சீரியஸாக இருந்த மூஞ்சியை மாற்றி திடீரென காமெடியாக பேசிய விக்ரமன்- விழுந்து விழுந்து சிரித்த ஹவுஸ்மேட்ஸ்

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் Ticket To Finale டாஸ்க் நடந்தது. இதில் நடைபெற்ற அனைத்து டாஸ்குகளிலும் வெற்றி பெற்று முதல் ஃபைனலிஸ்டாக அமுதவாணன் தேர்வாகியுள்ளார். இதனை அடுத்து யாரெல்லாம் ஃபைனலிஸ்ட் ஆவார்கள் என ரசிகர்கள் ஆவலா உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து BB Critics விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.குறிப்பாக அசீம் விக்ரமனுடன் மோதலில் ஈடுபட்டார்.


Ticket To Finale டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை, விக்ரமன் தொடர்ந்து நியாயம் பேசுவது உள்ளிட்ட விஷயங்களில் தான் அதிகம் முனைப்புடன் இருப்பார் என்றும் டாஸ்க்கில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாதவர் என்றும் கூட கருத்துக்கள் நிலவி வந்தது. இதனை சில ஹவுஸ்மேட்ஸ் கூட குறிப்பிட்டிருந்தனர். அப்படி ஒரு சூழலில், Ticket To Finale டாஸ்க்கில் விக்ரமன் விளையாட்டுத் திறனை பல போட்டியாளர்கள் பாராட்டியும் வருகின்றனர்.

கேமில் சிறப்பாக ஆர்வம் காட்டுகிறார் என்றும், மிகவும் முனைப்புடன் அதிக பலத்துடன் செயல்படுகிறார் என்றும் நிறைய பேர் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சற்று சீரியஸாகவே எப்போதும் இருக்கும் விக்ரமன், தற்போது Fun மோடில் செயல்பட்டது சக போட்டியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதிய டாஸ்க் ஒன்றில், "ஏன் அவருக்கு தெரியாதா?. நீங்க சொல்லலைன்னா அவருக்கு தெரியாதா?" என யாரையோ இமிடேட் செய்து மிகவும் வேடிக்கையாக பேசுகிறார் விக்ரமன். இதனைக் கேட்டதும் மைனா நந்தினி உள்ளிட்டோர் ஆச்ச்ரியத்துடன் விக்ரமனை பார்க்கின்றனர். தற்போது அவர் மிகவும் மாறி வருவதாகவும் காமெடி எல்லாம் செய்கிறார் என்றும் சக போட்டியாளர்கள் ஜாலியாக குறிப்பிடுகின்றனர். அதே போல, பார்வையாளர்களும் முன் இல்லாத அளவுக்கு வேடிக்கை நிறைந்த விக்ரமனை பார்ப்பதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement