• Apr 25 2024

அச்சு அசல் குழந்தையாகவே மாறிய விக்ரமன்... ஆச்சரியமாகப் பார்க்கும் போட்டியாளர்கள்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'.  இந்நிகழ்ச்சியில் சீசன் 6ஆனது தொடங்கி 76 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். 

அந்தவகையில் தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில் இந்தவாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் நீங்கள் என்ன சொல்ல விரும்பிலும் அதனை குழந்தை மொழியில் பேசுமாறு கமல் கூறுகின்றார். உடனே விக்ரம் எழுந்து அச்சு அசல் குழந்தை போலவே மாறி நடித்துக் காட்டுகின்றார். அதில் அவரின் நடிப்பு நன்றாக இருப்பதனால் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து அமுதவாணன், ஷிவின், ஆகியோரும் குழந்தை மொழியில் பேசுகின்றார்கள். ஆனால் கமல் அசீம் பேசும்போது "நீங்க குழந்தை மொழி பேசும்போதே 4வயசு கூடுகிறது" எனக் கூறி சிரிக்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கினறது. 


இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement