• Apr 20 2024

விக்கிரமனுக்கு என்மீதும் குயின்சி மீதும் ஒரு கண் இருக்கு- ரகசியத்தை அம்பலமாக்கிய மைனா நந்தினி

stella / 1 year ago

Advertisement

Listen News!


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். 

அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம்,ராஜகுருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த டாஸ்க் ஆரம்பித்த நாளே விக்ரமனுக்கும் அசீமிற்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டு விட்டது.


இது ஒரு புறம் இருக்க இது தான் சந்தர்ப்பம் என்று ராபேர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடன் இணைந்து ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றார்.இருவரும் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ எல்லாம் வைரலானது.

இந்த நிலையில் இதில் சேவகாராக இருக்கும் மைனா காதுகேளாவராகவும் இருக்கிறார். அவரிடம் போய் ராஜ குருவான விக்ரம் பணியாளரான குயின்சி உங்கள் மீது கண் வைத்திருக்கின்றார்.கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு மைனா ஓ உங்களுக்கு என் மீதும் பணியாளர் மீதும் ஒரு கண் இருக்கா என நக்கலடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement