• Apr 25 2024

அசீமுக்கு டஃப் கொடுத்த விக்ரமன்- மங்காத்தா ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு- அட்டகாசமான முதலாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர் அசீம், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். கடந்த இரு வாரங்களாக இவரின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் ஆயிஷாவுடன் சண்டயிட்டு அவரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய அசீமுக்கு போட்டியாளர்கள் அனைவரும் ரெட் கார்டு கொடுத்தனர்.

கமலும் எச்சரித்திருந்தார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத அசீம், இந்த வாரமும் அதே தவறை மீண்டும் செய்து வருகிறார். தற்போது அமுதவாணனை போடா... வாடா என ஒருமையில் பேசி அவரை கிண்டலடித்து அசீம் பேசுவது சக ஹவுஸ்மேட்ஸுக்கே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தற்பொழுது நடைபெறும் பொம்மை டாஸ்கில் அசீம் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றார்.அதனால் இந்த வாரம் இவர் தான் வெளியேறுவாரா என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இன்று வெளியாகிய முதலாவது ப்ரோமோவில் அசீம் விக்ரமனின் பொம்மையையும் விக்ரமன் அசீமின் பொம்மையையும் எடுக்கின்றனர்.

இவர்கள் இருவருள் ஒருவர் கூட டோல் ஹவுஸிற்குள் செல்லாத காரணத்தினால் இருவரையும் இந்த கேமிலிருந்து பிக்பாஸ் வெளியேற்றுவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement