• May 29 2023

பிரபல இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்க மறுத்தாரா விக்ரம்- புதிய சர்ச்சைக்கு அவரே கொடுத்த விளக்கம்

stella / 6 days ago

Advertisement

Listen News!

Black Friday படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுராக் காஷ்யப்.  இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய  நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமான், தேவ் டி உள்ளிட்ட படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.அவர் இயக்கியதிலேயே பெஞ்ச் மார்க்காக கருதப்படுவது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படம். 

அந்தத் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்க்க சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் அனுராக்.அவர் இப்போது ராகுல் மற்றும் சன்னி லியோனை வைத்து கென்னடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படமானது சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் திரையிடப்பட்டது.


 இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் இப்படம் குறித்து அனுராக் கொடுத்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அனுராக் காஷ்யப் அளித்த பேட்டியில், "ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்துதான் இந்தப் படத்தை நான் எழுதினேன். அதனால்தான் படத்திற்கும் 'கென்னடி' என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனென்றால் அந்த நடிகரின் செல்லப்பெயர் 'கென்னடி'. 'கென்னடி' என்பது வேறுயாருமில்லை சியான் விக்ரமின் செல்லப்பெயர்தான் அது. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை தொடர்பு கொண்டேன்.

ஆனால், அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு நடிகர் ராகுலை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அவரது பதில் எனக்கு உற்சாகமாக இருந்தது. ராகுல் அற்பணிப்புடன் சுமார் எட்டு மாதங்கள் இப்படத்திற்காகவே ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்" என கூறினார். இந்தப் பேட்டியை அடுத்து விக்ரம் அனுராக் படத்தில் நடித்திருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதனையடுத்து விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், " சமூக ஊடகங்களில் இருக்கும் எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கூறியதன்படி ஒரு வருடத்திற்கு முன் நடந்த நம் உரையாடலை மீண்டும் நினைவுகூர்ந்து பார்த்தேன். அதில், இந்தப் படத்துக்காக நீங்கள் என்னை தொடர்புகொள்ள முயற்சித்தீர்கள் என்றும், நான் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் நீங்கள் வருத்தப்பட்டதை வேறொரு நடிகர் மூலம் கேள்விப்பட்டேன்.


பின்னர், நானே உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எந்த மெயில் அல்லது மெசேஜும் வரவில்லை என்று விளக்கினேன். நீங்கள் என்னை தொடர்புகொண்ட ஐடி இப்போது செயலில் இல்லை, 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது நம்பரும் மாறிவிட்டது. அன்று உங்களிடம் சொன்னதை இப்போதும் சொல்ல விரும்புகிறேன்.

அன்று அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் கூறியதுபோல், உங்கள் கென்னடி படத்தைக் காண நான் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அத்திரைப்படம் என் பெயரில் இருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் படத்தைக் காண காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

முற்றிலும் சரி. மக்களின் தகவலுக்காக சொல்கிறேன். வேறொரு நடிகரிடம் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் (விக்ரம்) கண்டறிந்ததும், அவர் என்னை நேரடியாக அழைத்தார், அவரிடம் வேறு வாட்ஸ்அப் எண் இருப்பது அப்போதுதான் எனக்கு தெரியவந்தது. பிறகு அவரை தொடர்புகொள்வதற்கான சரியான தகவலை கொடுத்தார்.


அதுமட்டுமின்றி கதையை படிப்பதற்கும் அவர் தயாராக இருந்தார்.. ஆனால் அதற்குள் நாங்கள் ஒரு மாதம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தோம். அதனையடுத்து படத்திற்கு "கென்னடி" என்ற பெயரைப் பயன்படுத்தவும் அவர் முழு சம்மதம் கொடுத்தார். நான் அந்த நேர்காணலில் கூறியது என்னவென்றால் அந்தப் படத்துக்கு எப்படி கென்னடி என்று பெயர் வந்தது என்பதைத்தான். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நானும், விக்ரமும் இணைந்து பணியாற்றாமல் ஓய்வு பெறமாட்டோம் என நம்புகிறேன்" எனதெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement