• Sep 27 2022

OTT-இல் வெளியாகும் விக்ரம் திரைப்படம்-வைரலாகும் ஆண்டவரின் வீடியோ

Listen News!
stella / 2 months ago
image
Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன்தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மற்றும் கெளரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ளார்.

கடந்த ஜூன் 3 மிக பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸானது . படம் வெளியாகி 26 நாட்களை கடந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.அதன் படி விக்ரம் ரூ.400 கோடிக்கு மேல் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

https://twitter.com/disneyplusHSTam/status/1542017780907737090

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் OTT ரிலீசுக்கு கூட பிரமோஷனில் தொடங்கியுள்ளார் கமல். ஜூலை 18 ஆம் திகதி விக்ரம் திரைப்படம் ஹாஸ்டாரில் வெளியாக உள்ளது. இதன் அறிவிப்பிற்காக கமல் விக்ரம் பட பாணியில் ப்ரோமோவில் வந்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%