• Apr 18 2024

தனது கையாலே ரசிகர்களுக்கு டீ போட்டுக் கொடுத்த விக்ரம்... இதுவரை யாரும் பார்த்திராத அரிய வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். மற்ற நடிகர்களை போலவே இவருக்கென்றும் ஒரு ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராவும் உண்டு.


இவரின் நடிப்பில் அண்மையில் 'கோப்ரா' மற்றும் ''பொன்னியின் செல்வன்' ஆகிய இரு திரைப்படங்கள் பிரமாண்டமாக வெளிவந்தன.

இதில் பொன்னியின் செல்வன் படமானது மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்து வருகின்றது. அதுபோன்று கோப்ரா எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

இப்படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளிவந்த நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.


இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் தன்னுடைய படம் ஒன்றிற்காக மக்கள் மத்தியில் சென்று விக்ரம் ப்ரோமோஷன் பணிகளை செய்துள்ளார். அப்போது தனது ரசிகர் ஒருவருக்கு அவரே தனது கையினால் டீ போட்டு கொடுத்துள்ளார். 

அந்த வீடியோ ஆனது தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement