பவர்ஸ்டார் மனைவியாக நடிக்கும் விஜய்யின் மெர்சல் பட நடிகை- இந்த நடிகையா?

351

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவ்வாறு தமது சிறந்த நடிப்பினால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகின்றார். அத்தோடு தான் நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருந்தால் மாத்திரமே அப்படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும்மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம்.

அத்தோடு இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மனைவி கண்ணம்மா கதாபாத்திரம் தான், அதன்படி தெலுங்கு ரீமேக்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் மனைவியாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.