• Apr 20 2024

விஜய்யின் நண்பர் சஞ்சீவின் மகனா இது..? தந்தையை மிஞ்சும் அளவிற்கு ஹீரோ போல் இருக்காரே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் நெருங்கிய நண்பராக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். அதாவது சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது.


அந்த நட்பே விஜய்யின் புதிய கீதை, நிலாவே வா, பத்ரி, சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் சஞ்சீவை நடிக்க வைத்தது. அதுமட்டுமல்லாது 'மெட்டி ஒலி' சீரியலின் வாயிலாக சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி இருந்தார் சஞ்சீவ். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார்.


அத்தோடு பிக்பாஸ் சீசன் 5 இல் பங்குபற்றியதன் மூலம் தனது புகழை மென்மேலும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்திருக்கின்றார். சஞ்சீவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவரின் மகளை பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் மகனை தெரிந்தவர்கள் குறைவு.

இந்நிலையில் இவரின் குடும்பப் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. அதில் சஞ்சீவின் மகனை பார்த்த பலரும் சஞ்சீவ் அச்சு அசலாக ஹீரோ போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.  




Advertisement

Advertisement

Advertisement