• Apr 25 2024

சிக்கலில் சிக்கிய விஜய்யின் படம்… ஆதரவு தெரிவித்த சிம்பு…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தளபதி என்றால் அது நம்ம விஜய் தான். இவரின் நடிப்பிற்கும், நடனத்திற்கும் மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களின் குடியிருக்கின்றார். நாளைய தீர்ப்பின் மூலம் ஆரம்பமான இவரின் திரைப்பயணம் இன்று 65 இற்கு மேற்பட்ட படங்களைத் தாண்டி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

இவ்வாறாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். விஜய் நடித்த படங்களில் பல படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. அந்த வகையில் 'வாரிசு' படம் தொடர்பாகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் கிளம்பிய வண்ணமே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு சில வருடங்களாக விஜய்யின் திரைப்படங்கள் எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் வெளிவந்ததில்லை. அவ்வாறாக விஜய் மற்றும் அமலாபால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே 'தலைவா'. இப்படத்தினுடைய டைட்டில் பிரச்சனை காரணமாக அப்படம் வெளியாகுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

இதனால் இந்தப் படமானது குறித்த திகதியில் வெளியாகவில்லை. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் திகதி பின்னுக்குத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. மேலும் அப்படம் முதல் நாளே இணையத்தில் வெளியாகிவிட்டது. அப்போது பல சர்ச்சைகளும் கிளம்பத் தொடங்கின.

அந்த நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இருந்தது நடிகர் சிம்பு மட்டுமே. அவர் விஜய் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பதிவு ஒன்றினையும் வெளியிட்டு இருந்தார். அப்பதிவினூடாக விஜய் ரசிகர்களை அமைதி காக்கும் படி சிம்பு விஜய்க்கு ஆதரவு தெரிவித்துக் கூறியிருந்தார்.

மேலும் 'தலைவா' திரைப்படம் ஆனது வெளியாகி இன்றுடன் 9 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த சுவாரஸியமான தகவலை தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement