• Apr 20 2024

வாரிசு படத்தில் விஜய்க்கு பிடித்த விஷயங்கள்..வெளியான சூப்பர் தகவல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ராஷ்மிகா முதல்முறையாக விஜய்யுடன் இப்படத்தில் ஜோடியாக நடிக்க தமன் இசையமைத்து வருகின்றார்.

அத்தோடு  சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒரு குடும்ப கதையம்சம் கொண்ட செண்டிமெண்ட் படமாக இப்படம் உருவாகி வருகின்றது. இதையடுத்து இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று மாறுபட்டு வித்தியாசமானதாக இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில்  கடந்த மாதம் இப்படத்திலிருந்து விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி செம ஹிட்டடித்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு சிம்பு பாடிய தீ தளபதி என்ற மாஸான பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

இவ்விரு பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது. எனினும் இதைத்தொடர்ந்து இன்று இப்படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியாகும் நிலையில் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் விஜய் வாரிசு படத்தை பார்த்ததாகவும், அவருக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்திலிருந்து அம்மா செண்டிமெண்ட் பாடல் வெளியாகவுள்ளது என்றும், அப்பாடல் தான் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் கூறியுள்ளார். மேலும் வாரிசு படத்தில் கடைசி இருபது நிமிடங்கள் விஜய்க்கு மிகவும் பிடித்த விஷயம் என்ற கூடுதல் தகவலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement