• Apr 25 2024

அஜித்தைத் தொடர்ந்து பைக் டூருக்கு கிளம்பிய விஜய்யின் அப்பா- வேற லெவல் ஹான்சமாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அமாரவதி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அஜித். இவர் இதனைத் தொடர்ந்து இதுவரை 60 படங்களில் நடித்திருக்கின்றார். இவரது 61 படமான துணிவு படத்தை எச்.வினோத் இயக்கி வருகின்றார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது. நடிப்பைத் தவிர பைக் ரேசிங்கிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் பல்வேறு இடங்களுக்கும் பைக்கில் சென்று வருகின்றார்.


அண்மையில் அவர் துணிவு பட புரமோஷனில் கலந்துகொள்ள இருக்கிறார் என வதந்தி பரவ உடனே ஒரு படம் தான் பேச வேண்டும் என கூறியதை அவரது மேனேஜர் பதிவு செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக துணிவு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நடிகரின் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் வைரலாக்கிவிட்டார்கள்.

அஜித் பைக்கில் உலகம் சுற்றும் கனவை இப்போது நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அடுத்து எங்கு செல்ல இருக்கிறார் என்பது தெரியவில்லை, இந்த நிலையில் இன்னொரு பிரபலத்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது விஜய்யின் தந்தை SAC இமாலயாவுக்கு சென்றுள்ளார்,அவர் பைக்கில் சூப்பரான லுக்கில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்ததும் ரசிகர்கள் அஜித்தை போல இவர் பைக்கில் உலகம் சுற்ற இருக்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement