• Apr 24 2024

லியோ படக்குழுவினருக்கு விஜய் போட்ட கன்டிஷன்- இப்படியெல்லாம் நடக்கின்றதா?- வாரிசு படத்தில் நடந்தது தான் இதற்கு காரணமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். தொமர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவருக்கென்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.தன் படங்களின் மூலமாகவே ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பாகவும் பல நல்ல உதவிகளை செய்து கொண்டும் வருகிறார். 

இது அரசியலில் ஒரு முதல் படி என்று தான் அனைவரும் கருதுகின்றனர். மேலும் சிலர் எம்ஜிஆர், விஜயகாந்த் இவர்களைப் போன்று விஜய்யால் வர முடியாது என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பாரா என்று விஜய் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.


 வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் லியோ படத்தில் விஜய் சில உத்தரவுகளை போட்டுள்ளாராம். அதாவது வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே அந்தப் படத்தின் சில காட்சிகள் வீடியோக்கள் மூலமாகவும் புகைப்படங்கள் மூலமாகவும் வெளியாகி விஜய்யை மிகவும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 

அதன் காரணமாக விஜய் மிகவும் அப்செட்டாக இருந்தார் என்றும் செய்திகள் வெளிவந்தன.இதையெல்லாம் கருத்தில் கொண்டு விஜய் முதல் வேலையாக லியோ படத்தில் பணியாற்றிய ஜிம் பாய்களை மாற்றியுள்ளாராம். அதாவது இந்த ஜிம் பாய்கள் வாரிசு படத்திற்காக பணிபுரிந்தவர்கள். அதனால் அந்தப் படத்தில் பணி புரிந்த ஜிம் பாய்களை மாற்றி விட்டு வேறொரு கம்பெனிகளிலும் இருந்து ஜிம் பாய்களை வரவழைத்திருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் இவர்களை கவனிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

அதே நேரம் அந்த ஐந்து பேர் கொண்ட குழு செட்டில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களின் செல்போன்களையும் வாங்கிக் கொண்டு ஒரு கவரில் போட்டு வைத்து விடுவார்களாம். இடைவேளை நேரத்தில் மட்டும் அவரவர் போன்களை கையில் கொடுத்து அவர்கள் உறவினர்களுடன் பேச அனுமதி கொடுப்பார்களாம். அதன் பிறகு மீண்டும் வாங்கிக் கொள்வார்களாம். 


இதன் இடையில் யாரேனும் கெஸ்ட் வந்தால் அவர்களையும் முழுவதுமாக சோதனை செய்த பிறகே லியோ படத்தின் செட்டிற்குள் அனுமதிப்பார்களாம். இப்படி மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார்களாம் லியோ படத்தின் பட குழு என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.











Advertisement

Advertisement

Advertisement