படங்களைப் போலவே திருமணவாழ்க்கையிலும் தோல்வியைச் சந்தித்த விஜய்பட நடிகை

239

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சில படங்களிலேயே தொடர்ந்தும் படவாய்ப்புக்கள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகிய நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகை மோனிகா காஸ்டலினோ. மேலும் ஹிந்தி நடிகையான இவர் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான “மின்சார கண்ணா” திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

மேலும் இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் நல்ல படவாய்ப்புக்கள் அமையாததால் ஹிந்தி சினிமாவிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார். அத்தோடு காம சுந்தரி என்கிற படத்தில் கவர்ச்சியாகவும் நடித்தார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்தபோதிலும் அவர் தொடர் தோல்விகளை சந்தித்தார். இதனால் பட வாய்ப்புகள் அங்கும் இல்லாமல் போனது.

இதையடுத்து அவர் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அவர் தொலைக்காட்சி தொடர்களில் தான் நடித்து வருகிறார்.இதற்கிடையே சத்யபிரகாஷ் சிங் என்கிற துணை இயக்குநரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான ஓராண்டுக்குள் அவர்கள் பிரிந்துவிட்டனர். சத்யபிரகாஷ் சிங்கிற்கு கள்ளத்தொடர்பு இருந்ததுடன், தன்னை கொடுமைப்படுத்தியதாக புகார் தெரிவித்தார் மோனிகா.

இந்நிலையில் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவது அறிந்து விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மோனிகா ஒரேயொரு தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் கோலிவுட் ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவில்லை. லேசாக வெயிட் போட்டிருக்கும் மோனிகாவை பார்த்தால் மின்சார கண்ணா பட ஹீரோயினா இவர் என்று பலரும் வியக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.