• Apr 25 2024

விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியா இது...? தேவதை மாதிரி இருக்காங்களே... என்ன ஒரு அழகப்பா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் "ரிக்சா மாமா" திரைப்படத்தில் அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து வளர்ந்ததும் 'தேவதையை கண்டேன், தித்திக்குதே' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அத்தோடு 'பிரியமான தோழி' படத்தில் மாதவனின் தோழியாகவும் நடித்திருக்கின்றார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது இவர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர்.


தன்னுடைய அழகால் பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் 18 ஜூன் 2009-இல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.


இந்நிலையில் ஸ்ரீதேவி நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலை உடுத்தி நிறைய நகை அணிந்து மணப்பெண் போன்று காட்சி அளிக்கும் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக ஸ்ரீதேவி தேவதையை போலவே இருக்கின்றார் எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement