நடிகர்களுக்கு கல்லால் அடிக்கும் விஜயகாந்த்- அவருடைய குறும்புத்தனத்தினால் ஏற்பட்ட விபரீதம்

தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி முன்னணி நடிகராக வந்தவர் தான் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமல்லாது அரசியல்வாதியாகவும் இருந்து வருகின்றார் என்பது யாவரும் அறிந்ததே. இவர் குறித்த சுவாரஸியமான விடயங்களை பிரபலங்கள் பலரும் பல பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நடிகரான மீசை ராஜேந்திரனும் புதிய தகவலைக் கூறி இருக்கின்றார். அதாவது விஜயகாந்த்
தனது ஷாட் முடிந்து விட்டால் உடனே கேரவனுக்கோ அல்லது வேறு எங்கும் செல்ல மாட்டாராம். நடிகர்களுக்காக போடப்படும் சேரில் கூட அமர மாட்டாராம். கேமரா வைப்பதற்காக பயன்படுத்தப்படும் இரண்டு அடி ஸ்டூலில் அமர்ந்து கொண்டு எப்படி படமாக்குகிறார்கள், மாற்றவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று அனைத்தையும் வேடிக்கை பார்ப்பாராம்.

அவர் ஸ்டேண்டில் உட்கார்ந்து கொண்டு பிற நடிக்கும் காட்சிகளை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் அவர்கள் நடிக்கும் பொழுது ஒரு சிறிய கல்லை எடுத்து அதில் நடிக்கும் ஏதாவது ஒரு நடிகர் மீது அடிக்கிறேன் என்று சொல்லி குறி வைத்து சரியாக அடிப்பாராம் விஜயகாந்த் பின்னர் கண்டும் காணாதது போல் வேறு எங்கோ திரும்பி ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொள்வாராம். அதேபோல மதிய உணவு இடைவேளை வரும் பொழுது அனைவரும் சாப்பிட்டு விட்டார்களா என்று ஒவ்வொருவரையும் பார்த்துவிட்டுதான் இறுதியாக தான் சாப்பிட அமர்வார் என்றும் சொல்வார்கள்.

நடிகராக இருக்கும்போது இப்படி பல குறும்புத் தனங்களை செய்யக் கூடியவராக, தான் பார்த்த விஜயகாந்த் சாரை சீரியஸாகவும் பார்த்துள்ளதாக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல்வாதியான பின், தன்னுடைய குறும்புத்தனங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு அனைத்து விஷயங்களையும் சீரியசாக அணுகும் நபராக விஜயகாந்த் தன்னைத் தானே மாற்றிக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்