• Sep 09 2024

திடீரென மாலையும் கழுத்துமாக கல்யாணம் பண்ணிட்டு வந்த சீதா மற்றும் ரவி- மீனாவைத் திட்டித் தீர்த்த விஜயா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொணடிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மனோஜிடம் அவரது அப்பா கல்யாணத்திற்கு உன்னுடைய ஆபிஸ்ல யாருக்கம் சொல்லலையா என்று கேட்க நானே புதுசாத் தானே சேர்ந்திருக்கிறன் அது தான் சொல்லவில்லை என்று சொல்ல அந்த நேரம் விஜயா வந்து எப்பா பார்த்தாலும் அவனை கேள்விக்கு மேல கேள்வி கேட்கிறது தான் வேலை போய் ரெஸ் மாத்திட்டு வா என்று மனோஜை அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் மீனா விளக்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த விஜயா, மீனாவைப் பார்த்து திட்டுகின்றார்.மனோஜிற்கு நல்ல படியா கல்யாணம் நடக்கனும் நீ விளக்கேற்றினால் விளங்குமா,நீயே ஒரு தரித்திரம் என்று கண்டபாட்டுக்குத் திட்டி அனுப்பிவிட்டு தான் விளக்கேற்றுகின்றார். மீனா கண்கலங்கி இருப்பதைப் பார்த்த அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்க ஊதுபத்தி புகை கண்ணில பட்டிருச்சு மாமா என்று மீனா சமாளிக்கின்றார்.

மறுபுறம் ரோகினியை மிரட்டிக் கொண்டிருக்கும் நபர் காரில் இருந்து கொண்டு தனது நண்பரிடம் போனில் பேசிக் கொண்டு வருகின்றார். யாரும் இல்லாத அவ என்னுடைய பொண்டாட்டிய எனகிட்ட இருந்து பிரிச்சு என்னை அவமானப்படுத்திட்டா அவளை சும்மா விடமாட்டேன். இந்த கல்யாணத்தை நிறுத்தாமல் விடமாட்டேன் என்று சொல்கின்றார்.


தொடர்ந்து ரோகினி மனோஜிற்கு போன் செய்து தான் முதல் திருமணம் செய்த விஷயத்தைச் சொல்ல மனோஜ் எதுவும் சொல்லாமல் போனை கட் பண்ணி விடுகின்றார். இதனால் ரோகினி கல்யாணப்புடவை கட்டுவதா என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க மீனா வந்த கதவைத் தட்டி உங்களை கீழே வரச் சொல்லுறாங்க என்று சொல்ல ரோகினி வெயிட் பண்ணுங்க வாரேன் என்று சொல்கின்றார்.

தொடர்ந்து தனது தோழியிடம் பேசிட்டு இருக்கும் விஜயா மாலை கட்ட வேற நல்ல இடத்தில கொடுத்திருக்கலாம். அவங்க கடைதான் ஏதோ பெரிய கடை மாதிரி இரண்டு மாலை கட்ட இவ்வளவு டைம் எடுத்திட்டு இருக்கிறாங்க என்று சொல்ல அந்த நேரம் மீனாவின் தங்கச்சி சீதாவும் முத்துவின் தம்பி ரவியும் மாலையும் கழுத்துமாக கல்யாணம் பண்ணிட்டு வருவதைப் பார்த்து விஜயா கலங்கி போய் கத்துகின்றார். 


அந்த நேரம் அவரது மாமியாரும் அண்ணாமலையும் வந்து என்ன ஆச்சு என்று கேட்க ரவி மாலையும் கழுத்துமாக கல்யாணம் பண்ணிட்டு வாரான் என்று சொல்ல விஜயாவின் மாமியார் என்ன ஆச்சு இவளுக்கு, அவங்க கல்யாணத்திற்கு மாலை எடுத்திட்டு வாறாங்க எனறு சொல்ல மீண்டும் திரும்பிப் பார்த்த விஜயா இருவரும் கையில் மாலை கொண்டு வருவதைப் பார்த்து அப்போ இருவரும் கல்யாணம் பண்ணிட்டு வரவில்லையா இது என்னுடைய கனவா என்று நிம்மதியடைகின்றார்.

விஜயாவை அவரது தோழி இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கும் நீ பதறாத என சமாதானப்படுத்துகின்றார். தொடர்ந்து இருவரும் ரோகினியை அழைக்க செல்ல வாசலில் மீனா நிற்பதைப் பார்த்து நீஎதுக்கு இவ்ங வந்த உனக்கு சூசகமா சொன்னா புரியாதா என்று திட்ட மீனா அங்கிருந்து கிளம்பி வருகின்றார். பின்னர் விஜயா ரோகினியிடம் சென்று சீக்கிரம் புடவையை மாத்திட்டு கீழே வாம்மா லேட் ஆகிட்டு என்று பேசுகின்றார்.


கீழே வரும் மீனா தனது மாமனாரைச் சந்திக்க அப்போது அவர் விஜயா ஏதாவது சொல்லிட்டே தான் இருப்பா நீ தான் மூத்த மருமகள் இந்த கல்யாணத்தை நீ தான் முன்னுக்கு நின்று நடத்தனும் என்று சொல்கின்றார். இதனால் மீனா என்ன செய்வதென்று யோசிக்க மறுபுறம் ரோகினியின் தோழி புடவையை கட்டிட்டு கீழ வா என்ன நடக்குது என்று பார்ப்போம் என்று சொல்ல ரோகினி யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement