• Feb 01 2023

ஆடம்பர வாழ்க்கை வாழும் விஜய்- இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கின்றாரா?- இத்தனை பங்களா வைத்திருக்கின்றாரா?

Listen News!
stella / 2 weeks ago
image

Advertisement

Listen News!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமாகியவர் தான் விஜய். ஆரம்பததில் பல நெக்கட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த இவருடைய கெரியரில் திருப்பு முனையாக அமைந்ததது பூவே உனக்காக திரைப்படம். இதனைத் தொடர்ந்து குஷி, பிரண்ட்ஸ், யூத், காதலுக்கு மரியாதை என காதல் படங்களில் நடித்து காதல் மன்னனாக வலம் வந்தார்.

பின்பு  ஆக்‌ஷன் ஹீரோவாக திருமலை படத்தில் களமிறங்கினார்.தொடர்ந்து கில்லி, போக்கிரி, திருப்பாச்சி, சிவகாசி என பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார். விஜய்யை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது துப்பாக்கி திரைப்படம், அதன்பின் இவர் நடித்த கத்தி, ஜில்லா, சர்கார், மெர்சல், தெறி, பிகில், மாஸ்டர், வாரிசு என தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் தளபதியாக இடம்பிடித்து இருக்கிறார்.


ரியல் லைஃபை பொறுத்தவரை விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இருவருமே தற்போது வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.எளிமையை அதிகம் விரும்பும் விஜய், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.445 கோடியாம். ஆண்டுக்கு 120 கோடிக்கு மேல் சம்பாதித்து வருவதாகவும், அவரின் மாத வருவாய் மட்டும் ரூ.10 முதல் 12 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 

கடைசியாக விஜய் நடித்து முடித்த வாரிசு படத்துக்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம்.நடிகர் விஜய்க்கு சாலிகிராமம், நீலாங்கரை ஆகிய இரண்டு இடங்களில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. இதுதவிர சென்னையை சுற்றி இவருக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களும் நிறைய உள்ளன. இதில் விஜய் நீலாங்கரையில் கட்டியுள்ள ஆடம்பர பங்களா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. ஒருமுறை அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் கடற்கரை வீட்டை பார்த்த விஜய்க்கு அந்த வீட்டின் டிசைன் மிகவும் பிடித்துப்போனதாம். அதனை மனதில் வைத்து தான் நீலாங்கரையில் உள்ள வீட்டை கட்டி இருக்கிறாராம் விஜய்.கார்கள் மீதும் விஜய்க்கு அதீத பிரியம் உண்டு. இதன்காரணமாக அவர் அரை டஜின் கார்களை வாங்கி உள்ளார். அதில் அவருக்கு மிகவும் பிடித்தமான கார் என்றால் அது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் தான். இந்த காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் விஜய். இந்த கார் வாங்கிய பின் வரி பிரச்சனையிலும் சிக்கினார் விஜய்.


இதுதவிர பி.எம்.டபிள்யூ X5 மற்றும் X6 மாடல் கார்களும், ஆடி A8 L ரக கார், லேண்ட் ரோவர் Evoque, ஃபோர்டு மஸ்டேங், வோல்வோ XC90, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, டொயோட்டா இன்னோவா என விதவிதமான கார்களை வாங்கி உள்ளார் விஜய். இந்த கார்களின் மதிப்பு பல கோடிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.அதேபோல் விஜய்க்கு சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. அந்த நிறுவனத்துக்கு வித்யா விஜய் புரொடக்‌ஷன்ஸ் என பெயரிட்டுள்ளார் விஜய். மறைந்த அவரது தங்கையின் நினைவாக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு தன்னுடையை பெயருடன் தனது தங்கை பெயரையும் சேர்த்து வைத்துள்ளாராம் விஜய்.


Advertisement

Advertisement

Advertisement