• Apr 24 2024

திடீரென சிம்பிள் உடையில் கோவிலுக்கு சென்ற விஜய் டீவி ஹீரோயின்கள்… துளி மேக்கப் கூட இல்லையே… வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் எத்தனையோ எத்தனையோ சேனல்கள் உருவாகி இருந்தாலும் இன்றுவரை அதிகளவான பார்வையாளர்களைக் கொண்ட சேனல் என்ற பெருமையை பெற்று வருவது விஜய் டீவி மட்டுமே. இங்கு ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் உடனே நல்ல வரவேற்பு கிடைத்து விடுகின்றது.

இங்கு ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனவோ அந்தளவுக்கு இந்த சீரியலில் நடிப்பவர்களும் இலகுவில் மக்களுக்கு தெரிந்த முகமாக மாறி விடுகின்றனர். அதுமட்டுமன்றி இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் பிரபலங்கள் பற்றி எந்த தகவல் வெளியானாலும் அது அவர்களின் ரசிகர் மத்தியில் உடனே வைரலாகி விடும்.

இந்த நிலையில் விஜய் டீவி பிரபலங்கள் சிலர் சாமி தரிசனம் செய்த தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதாவது விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்றான, 'பாக்கிய லட்சுமி' சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் ரித்விகாவும், 'ஈரமான ரோஜாவே' சீரியல் நாயகி பவித்ரா ஜனனியும் திடீர் என மாதேஸ்வரத்திலுள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் ரித்விகா சீரியலில் மட்டும் அல்லாமல், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடியவர். வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த இவர் ஒரு சில எபிசோடுகளில் மட்டுமே தலை காட்டினாலும் இவருக்கு இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல வழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான ரித்விகாவும் ஜனனியும் ஒன்றாக கோவிலுக்கு சென்றிருக்கின்றனர்.

அங்கு இவர்கள் இருவரும் மிகவும் எளிமையான மேக்கப்பில் எடுத்து கொண்ட தமது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள். இதனை பார்த்த இவர்களின் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? அப்புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement