• Apr 19 2024

பிக் பாஸ் 7ல் போட்டியாளராக களமிறங்க இருக்கும் விஜய் டிவி பிரபலம் .. யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட் சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் .இம்முறை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்6 இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. பொங்கல் சிறப்பாக டிடி, மா கா பா, பிரியங்கா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர் .இதனால் இந்த வீடு என்ஜோய் களைகட்டி வருகிறது.

வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களும் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். சில சமயம் நகைச்சுவையாக சென்றாலும், திடீரென சண்டையும் வெடிக்கிறது.

பிக் பாஸ் 6 இன்னும் முடிவடையாத நேரத்தில் பிக் பாஸ் 7 குறித்து தகவல் ஒன்று பேசப்பட்டு வருகிறது.



அதாவது என்னவென்றால், விஜய் தொலைக்காட்சியின் முக்கிய பிரபலங்களில் ஒருவரான மா கா பா ஆனந்த், பிக் பாஸ் 7ல் போட்டியாளராக வர வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் இருந்து பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் வந்துகொண்டு இருக்கின்றனர். இதில் வரும் சிலர் கண்டிப்பாக அடுத்த சீசனில் போட்டியாளராக வருவார்கள் என கடந்த வாரம் செய்தி ஒன்று வெளிவந்தது.

அதன்படி பார்த்தல் மாகாபா பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களமிறங்குவார் என்று கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement