தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இவர் நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயமானது அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பலராலும் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமட்டுமல்லாது சமீபகாலமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இவர் மேற்கொண்டு வருகின்ற சந்திப்புக்களும் அரசியல் குறித்த எண்ணமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்க மகளிர் அணிக் கூட்டம் செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் இடம்பெறுகின்றது. அந்தவகையில் மக்கள் இயக்கத்தில் மகளிரணி பங்களிப்பு குறித்து நடிகர் விஜய் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!