முதல்முறையாக தனது குடும்பத்தை தனி விமானத்தில் அழைத்துச் சென்ற ‘விஜய்’: வைரலாகி வரும் வீடியோ..!

128468

தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் விஜய் தேவரகொண்டா.

மேலும் இவருக்கென்று தனி ரசிகைகள் உள்ளார்கள் என்றுமே கூறவேண்டும்.அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் அடிக்கடி காணொளிகள் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.அது வைரலாகி விடும் கூட.

இது போலவே இவர் வெளியிட்ட காணொளி ஒன்று உலாவி வருகின்றது .அது என்னவென்றால் தன் அப்பா, அம்மா, தம்பி ஆனந்தை முதல் முறையாக தனி விமானத்தில் திருப்பதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் விஜய். அதை தன் தம்பி வீடியோ எடுக்க இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் காணொளியை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் விஜய் தேவரகொண்டாவை வாழ்த்தியுள்ளனர். அண்மையில் தான் அவர் தன் பெயரில் ஹைதராபாத்தில் தியேட்டர் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு படங்களில் நடிக்கத் துவங்கியபோது வங்கிக் கணக்கில் 500 ரூபாய் கூட இல்லாத விஜய் தேவரகொண்டா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கெரியரை பொறுத்தவரை பூரி கெஜன்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். அவர் இந்திய படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி. லைகர் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் அனன்யா.