• Mar 29 2024

புகைப்படத்துடன் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படக்குழு... விஜய் சேதுபதியின் வைரல் பதிவு..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

மறைந்த இயக்குநர் ஜனநாதனின் உதவி இயக்குநரான வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். 


இவர்களுடன் இணைந்து மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அத்தோடு நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் புகைப்படத்துடன் அறிமுகம் செய்துள்ளனர். அந்தவகையில் இதில் நடிகை ரித்விகா கன்னிகை என்ற கதாபாத்திரத்திலும் நடிகர் கருபழனியப்பன் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்திலும் நடிகை ஜெசி மதுரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement