• Apr 01 2023

விடுதலை படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்..இவ்வளவு தானா..?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி   ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை. இவர்களுடன்  பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் தற்பொழுது இரண்டு பாகங்களாக உருவாகி வருகின்றது.ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.


தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது.

இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 



Advertisement

Advertisement

Advertisement