• Mar 28 2024

முதல்முறையாக பிரபல மலையாள நடிகருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி- சூப்பரான அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக உளர்ந்த நிற்பவர் தான் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகும் 'மைக்கேல்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் முக்கிய படத்தில் அப்டேட் வெளியாகியுள்ளது.


அதாவது 'காக்காமுட்டை' படத்தின் ரசிகர்களின் கவனம் ஈர்த்த மணிகண்டன் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அத்தோடு மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


 முதல்முறையாக மம்முட்டியும், விஜய் சேதுபதியும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி இணையதளத்திற்காக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement