• Apr 24 2024

விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் இணைந்து நடித்த ஃபர்ஸி வெப்சீரிஸ் விமர்சனம்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ராஷி கன்னா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் 8 எபிசோடுகளாக  உருவாகியுள்ள வெப் சீரியல் தான் ஃபர்ஸி .இந்த தொடர் அமேசன்  பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் காசு இல்லாத கலைத் திறமை உள்ள ஹீரோ எப்படி கள்ள நோட்டு ரெடி செய்கிறான் என்பதும், கள்ள நோட்டுக் கும்பலை பிடிக்க அலையும் போலீஸ்காரர் இந்த பிரச்சனையை எப்படி கையாண்டார் என்கிற ரீதியில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸின் முழு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..


ரயிலில் சிறு வயதிலேயே சன்னி (ஷாகித் கபூரை) அவரது அப்பா விட்டு விட்டு தப்பித்து ஓடுகிறார். அப்பா வருவார் என ரயில் நிலையத்தில் ஓவியங்களாக வரைந்து காத்திருக்க பிச்சை எடுக்கிறான் என காசு போட்டு போகின்றனர். ஷாகித் கபூருக்கு காசு வருவதை பார்த்து அவனுடன் இன்னொரு அநாதை சிறுவன் ஃபெரோஸ் நண்பனாக இணைகிறான். சில நாட்களிலேயே தாத்தா ஹீரோவை கண்டு பிடித்து தன்னுடன் இருவரையும் அழைத்துச் செல்கிறார்.


கடனில் தாத்தாவின் கிரந்தி பத்திரிகை கிடக்க, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். எதை பார்த்தாலும் தத்ரூபமாக வரையும் ஆர்ட்டிஸ்ட்டான ஷாகித் கபூர் தாத்தாவின் கஷ்டத்தை போக்கவும் தங்களின் வறுமையை தீர்க்கவும் கள்ள நோட்டுக்களை அடிக்க ஆரம்பிக்கிறான்.

முதல் இரண்டு எபிசோடுகளில் கள்ள நோட்டு அடிக்க என்ன பேப்பர் பயன்படுத்த வேண்டும், சாண்ட்விச் நோட், டீயில் ஊறவைத்து அசல் நோட்டு போல மாற்றுவது என கள்ள நோட்டு அடிப்பது எப்படி என யூடியூப் வீடியோ வெளியிடுவது போல ஒரு டாக்குமென்டரியையே இயக்குநர் ராஜ் மற்றும் டிகே எடுத்துக் காட்டி உள்ளனர். விரைவில் யாராவது சிக்கினால் இந்த வெப்சீரிஸ் பார்த்து தான் கற்றுக் கொண்டோம் என பழி போட்டாலும் போடுவார்கள்.


கள்ள நோட்டுக்கள் புழக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு தலைவலி என ராஷி கன்னா கிளாஸ் எடுக்க இறுதிச்சுற்று படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ஜாகிர் உசேன் மந்திரியாக இந்த வெப்சீரிஸிலும் அதே அலட்சியத்தனமான கேரக்டரில் நடித்து வெறுப்பேற்றுகிறார். அவரிடம் தனக்கான ஒரு டீமை ஏற்பாடு செய்ய கெஞ்சுகிறார் போலீஸ் அதிகாரி மைக்கேலாக நடித்துள்ள விஜய்சேதுபதி.


முதல் எபிசோடிலேயே விஜய்சேதுபதி உலகளவில் கள்ள நோட்டு பிசினஸ் செய்யும் கேகே மேனனை சுற்றி வளைத்து பிடிக்க ஈஸியாக தப்பிக்கும் காட்சிகள் சிரிப்பை வர வைக்காமல் இல்லை. தனது மிரட்டலான நடிப்பால் வெப்சீரிஸை பரபரப்பாக்குகிறார். கச்சிதமாக கள்ள நோட்டு அடித்த ஷாகித் கபூரை முதல் சீனிலேயே பிடித்து விசாரிக்கும் காட்சியில் தான் ஹீரோவின் கதையே தொடங்குகிறது.

பணம் மனிதர்களை எந்தளவுக்கு மோசடிக்காரர்களாக மாற்றுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கின்றது இத்திரைக்கதை. விஜய்சேதுபதி, ஷாகித் கபூர், கேகே மேனன், ராஷி கன்னா என நடிகர்களின் நடிப்பு இந்த வெப்சீரிஸை பார்க்க வைக்கிறது. தமிழ் டப்பிங் ஹீரோ ஷாகித் கபூருக்கு ஜீவா கொடுத்திருக்கிறார். தமிழ் வெர்ஷனில் அவரே நடித்திருந்தால் கூட நல்லா இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. கள்ள நோட்டு பிசினஸ் எப்படி நடக்கிறது என்றும் அதனால் சாதாரண மக்கள் சந்திக்க போகும் சிக்கல் என பல விஷயங்களை சொல்லி மிரட்டி இருக்கின்றனர் 


8 எபிசோடுகளுக்கான வெப்சீரிஸ் கதை இது இல்லை என்பதே ஃபர்ஸி வெப்சீரிஸ் பார்த்த ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதே போல ஆபாச வசனங்கள் வார்த்தைக்கு வார்த்தை இடம்பெற்று எரிச்சலை உண்டாக்குகிறது. லிப் லாக், படுக்கையறை காட்சிகள் இருப்பதால் வீட்டில் ஓடிடியில் வந்தாலும், குழந்தைகள் இருக்கும் போது பார்க்க முடியாது. விஜய்சேதுபதிக்கும் ரெஜினா கசாண்ட்ராவுக்கும் ஓடும் போர்ஷன். இரண்டாம் சீசனுக்காக கிளைமேக்ஸை அப்படியே மொட்டையாக முடித்தது என ஏகப்பட்ட மைனஸ்கள் இருந்தாலும், நிச்சயம் ஒரு முறை இந்த வெப்சீரிஸை பார்த்து இந்த வீக்கெண்டை என்ஜாய் பண்ணலாம் என்று கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement