• Sep 28 2024

சிவகார்த்திகேயன் மகள் ஆகும் விஜய் சேதுபதி மகள்.. வேற லெவல் தகவல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி மகள், சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் மகளாக நடித்த இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த கேரக்டர்கள் அனைவரும் தங்களது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தனர் என்பதும் குறிப்பாக விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, சிங்கம் புலி, மணிகண்டன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.



இந்த நிலையில் ‘மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி - திவ்ய பாரதி தம்பதிக்கு மகளாக நடித்திருந்த சிறுமி சஞ்சனாவின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது சஞ்சனா, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23 ’படத்திலும் அவரது மகளாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வெளியானால் சஞ்சனாவுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement