• Apr 20 2024

ஒரே படத்தில் விஜய், கமல், சூர்யா, கார்த்தி.... அதுவும் இவரின் இயக்கத்திலா... ஆவலுடன் ரசிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். பல வெற்றிப் படங்களை இயக்கிய இவரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் 'தளபதி 67'. இப்படத்தின் உடைய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


மேலும் இப்படமானது லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையுமா என்பது குறித்தும் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதாவது எப்படி விக்ரம் - கைதி ஆகிய இரு திரைப்படங்களும் ஒன்றாக இணைந்ததோ அதே போல் விக்ரம் - கைதி - தளபதி 67 என்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU கான்சப்டில் 'தளபதி 67' படத்தை இணைப்பாரா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜின் LCUவில் தளபதி 67 திரைப்படம் ஏற்கெனவே இணைந்துவிட்டதாக கைதி, விக்ரம் படத்தில் பிஜாய் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நரேன் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் தற்போது செம குஷியில் உள்ளனர்.


அதுமட்டுமல்லாது LCUவில் தளபதி 67 இணைவதால் கண்டிப்பாக ஒரே படத்தில் விஜய், கமல், சூர்யா, கார்த்தியை காணவும் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனராம். பொறுத்திருந்து பார்ப்போம் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து எப்போது வரும் என்று.

Advertisement

Advertisement

Advertisement