• Apr 20 2024

விஜய் தான் நம்பர் 1 மாஸ் ஹீரோ- அஜித் என்றால் இது தான்- தில் ராஜுவைத் தொடர்ந்து தாறுமாறாக புகழ்ந்த நடிகர் ஷாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா என திரையுலக நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

மேலும், இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் ஷாம் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் ஷாம்  பிரபல சேனலுக்கு எக்ஸ்க்ளுசிவாக பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.


அவர் பேசியதில்  'இன்று விஜய் தான் நம்பர் 1 மாஸ் ஹீரோ' என்று கூறியுள்ள ஷாம், அஜித் குறித்து பேசும் பொழுது ' மற்ற நடிகர்களை போல் தலைக்கு டை அடித்துக்கொள்ளாமல், தனக்கேன தனி பாணியை வைத்து இருப்பது தான் அஜித் சாருடைய தன்னம்பிக்கை. இது தான் அஜித் சார் ' என்றும் கூறியுள்ளார்.


மேலும் வாரிசு படம், விஜய் ஆன் ஸ்க்ரீன் ஆஃப் ஸ்க்ரீன் எப்படி இருப்பார், வம்சியின் இயக்கம், மற்ற நடிகர்களுக்கு படத்தில் உள்ள ஸ்கோப், வாரிசு படத்தின் ட்ரெய்லர், அஜித் பற்றியும் அஜித்துடன் தன்னுடைய நட்பு பற்றியும் மற்றும் இயற்கை படம் குறித்தும் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement