• Apr 20 2024

விஜய் ஒரு 'மிருகம்'னு நிரூபிச்சிட்டாரு.. வாரிசின் ஓவர்சீஸ் சென்சார் விமர்சனம்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் முதல் ஓவர்சீஸ் விமர்சனம் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தெலுங்கில் வாரசுடு என்று உருவாகியுள்ள இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

அத்தோடு  பிரகாஷ் ராஜ், தெலுங்கு நடிகர் சுமன், சரத்குமார், ஷாம், குஷ்பு, யோகி பாபு என பெரும் ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது. வரும் 11 ஆம் தேதி காலை 4 மணிக்கு திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகளுடன் வாரிசு திரைப்படம்ட ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல கோடிகளில் பிஸ்னஸ் ஆகியுள்ளது.

வாரிசு படத்தின் ட்ரெயிலரிலேயே படத்தில் ஆக்ஷன், சென்ட்டிமெண்ட், ரொமான்ஸ் என அத்தனை அம்சங்களும் இருப்பது தெரிந்தது. கூட்டுக்குடும்பத்தை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யே இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு கதையில் நடித்ததில்லை என்று கூறியிருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில். ஓவர்சீஸ் சென்சார் போர்டின் உறுப்பினரான உமர் சந்த் என்பவர் வாரிசு படத்தை பார்த்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதன்படி நடிகர் விஜய் நடிப்பு, மேனரிஸம் மற்றும் வசனங்களுடன் தான் ஒரு மிருகம் என்பதை நிரூபித்துள்ளார். இந்த ஃபேமிலி டிராமாவில் அவர் பலவிதமான உணர்ச்சிகளை காட்டியுள்ளார். அவரிடமிருந்து இதுபோன்ற பொழுதுபோக்குகளைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எளிமையான கன்டென்ட் மற்றும் இதயத்தைத் தொடும் உணர்வுகள் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், கவனமாகப் பார்த்தால் இந்தப் படம் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது தெரியும். எல்லாவற்றையும் நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். தந்தை - மகன் உறவு, தாய் - மகன் உறவு ஆகியவற்றை அழகாக காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு படத்திற்கு காட்சி விருந்து அளித்துள்ளது. படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வசனங்கள் உள்ளன. ராக்கிங் இசை மற்றும் துணை நடிகர்களின் கண்ணியமான நடிப்பு.. என அனைத்தையும் பாராட்டியுள்ளார் இந்த சென்சார்போர்டு அதிகாரி.


அத்தோடு வாரிசு திரைப்படம் குறித்து அவர் மேலும் பதிவிட்டிருப்பதாவது, விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரின் காம்பினேஷனும் செம்ம ஹாட்டாக உள்ளது. முதல் பாதியிலும் இரண்டாவது இடைவெளி பகுதிகளிலும் 15 நிமிட திரைப்படத்தை ட்ரிம் செய்திருக்கலாம். கிளைமாக்ஸ் எபிசோட் அற்புதமாக உள்ளது. விஜய் என்ட்ரி சீன் முழுவதும் கிளாப்ஸ்தான். வெகுஜனங்களும் குடும்பங்களும் இந்த சாகாவை விரும்புவார்கள். விஜய் இஸ் பேக் என குறிப்பிட்டு வாரிசு திரைப்படத்திற்கு 5க்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார் ஓவர்சீஸ் சென்சார் போர்டு அதிகாரியான உமர் சந்த்.

Advertisement

Advertisement

Advertisement