• May 29 2023

பிரபல நடிகையை காதலித்து கழட்டி விட்ட விஜய்.. அப்பா சந்திரசேகரால் பறிபோன காதல் வாழ்க்கை..!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

பொதுவாகவே எல்லோருக்கும் இளம் பருவத்தில் வருகிற காதலை தாண்டி தான் அனைவரும் வந்திருப்போம். அதில் சிலரின் காதல் கைகூடும்  இல்லையென்றால் பாதியிலேயே முடிந்து விடும். இது சாதாரண நமக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த மனிதர்களும் இதை கடந்திருப்பார்கள். இதில் சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன. அப்படித்தான் தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய்யும் காதல்ல அகப்பட்டு தான் வந்திருக்கிறார்.

இதற்கிடையில் எஸ் ஏ சந்திரசேகருக்கு சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தால் இதை விட்டு விலகலாம் என்று நினைத்தார். அப்பொழுதுதான் விஜய்யை  வைத்து மறுபடியும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இவரால் ஜெயிக்க முடியாததை தன் மகனால் செய்து காட்ட வேண்டும் என்று வைராக்கியத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் விஜய்க்கு ஊன்றுகோலாக இருந்து கை தூக்கி விட்டார்.

அவர் எதிர்பார்த்தபடியே விஜய்யும் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடம் இருந்து பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அத்துடன் அவருக்கு ரசிகர்களும் சப்போர்ட் செய்வதை பார்த்து எஸ்ஏ சந்திரசேகர் மிகவும் ஆனந்தப்பட்டார். அந்த நேரத்தில் விஜய்யுடன் படங்களில் ஜோடி சேர்ந்த சங்கவியே பார்த்து பழக ஆரம்பித்தார். அத்துடன் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலவே வா போன்ற படங்களின் மூலம் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்அவுட் ஆனது.

அதுவே இவர்களுடைய பழக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அத்துடன் இவர்கள் இருவரும் சூட்டிங் நேரத்திற்கு போக வீட்டிற்கு வந்தும் போனில் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறிவிட்டது. இதனை கேள்விப்பட்ட எஸ்ஏ சந்திரசேகர் காதும் காதுமாய் வைத்து இந்த விஷயத்தை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்.அதற்கு காரணம் எஸ்ஏ சந்திரசேகர், எதிர்பார்த்த அளவுக்கு விஜய் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறார். 

இப்பொழுது இவருடைய காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் அது இவருடைய சினிமா கேரியரை பாழாகிவிடும் என்று நினைத்திருக்கிறார். அதற்காக விஜய்யை கூப்பிட்டு சினிமாவில் நடிக்கும் நடிகை என்னுடைய மருமகளாக வர முடியாது என்று கண்டிஷன் ஆக கூறிவிட்டார். அத்துடன் நீ நினைத்தபடி திருமணம் செய்தால் உன்னுடைய சினிமா கேரியரை முறிந்துவிடும் என்று எச்சரித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் விஜய்க்கும் வேறு வழி தெரியவில்லை. ஏனென்றால் அப்பொழுது விஜய் முழுக்க முழுக்க அவருடைய அப்பா கண்ட்ரோலில் இருந்ததால், அவர் சொல்வதை தான் கேட்கும் நிலை இருந்தது. அதனால் இவரும் சங்கவியை ஒரு டைம் பாஸ்க்கு காதலித்ததாக நினைத்து அனைத்தையும் மறந்து விட்டு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement