• Sep 26 2023

இயக்குநர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்- அடடே இது தான் காரணமா?

stella / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக பிரபலமானவர் இயக்குநர் மிஸ்கின். இயக்குநர் வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் பிரபலமானார்.

 இதையடுத்து, அஞ்சாதே, யுத்தம் செய், ஓணாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.தற்போது நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பிரபலங்களை வைத்து பிசாசு 2 படத்தினை இயக்கி வருகிறார்.


இவர் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்

இதை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் மிஸ்கின் நடித்துள்ளார். நேற்று லியோ படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்த்து விட்டதாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆனால், இதில் நடிகர் விஜய்யை ஒருமையில் பேசினார் என கூறி, மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த பதிவில் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்' என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement