• Apr 25 2024

லியோ படத்துடன் மோதத் தயாரான ஜவான்- ரூட்டை மாற்றிய அட்லி- செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கிய இளம் இயக்குநர்களில் ஒருவர் தான் அட்லி. இவர் பாலிவூட் நடிகர் ஷாருகானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார்.வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். 

மேலும் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ஜவான் படத்தை வருகிற ஜூன் 2-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்தாண்டு வெளிவந்த டீசரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை ஷூட்டிங் நிறைவடையாததால், இப்படம் ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.


 ஷூட்டிங்கை முடித்து கிராபிக்ஸ் மற்றும் பின்னணி பணிகள் இருப்பதால், இப்படத்தை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லியோ படமும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதால் தளபதி ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement