• Mar 29 2024

விவாகரத்து நடிகையுடன் ஒரே ரூமில் ஒன்றாக இருக்கும் விஜய் தேவர்கொண்டா.. அப்போ ராஷ்மிகா கதை..? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகின் இண்டர்நஷனல் கிரஷாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா. தெலுங்கில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம் உலகெங்கிலும் பிரபலமடைந்தார். இப்படத்தில் இடம்பெற்ற இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி பலரையும் கவர்ந்திருந்தது.


இதனையடுத்து மேலும் ஒரு சில படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதன் மூலம் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இடையேயான நட்பு பின்னர் காதலாக மாறியதாக சில கிசுகிசுக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. 


இந்த வதந்திகளுக்கு எல்லாம் ராஷ்மிகா பலமுறை இல்லை என்று கூறிய போதும், சமீபத்தில் இவர்கள் இருவரும் சீக்ரட்டாக துபாய்க்கு ட்ரிப் போனபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக் ஆகி இருவரது காதலையும் உறுதியாக்கியது. இருப்பினும் அது பற்றி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் இவர்கள் இருவருமே தங்களது சினிமாப் பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


அதாவது ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருப்பதை போல், விஜய் தேவர்கொண்டா சமந்தாவுக்கு ஜோடியாக குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பு ஆனது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தான் தற்போது பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர்சந்து தன்னுடைய twitter பக்கத்தில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களுடைய காதலை பிரேக் அப் செய்து விட்டதாகவும், இதனையடுத்து விஜய் தேவரகொண்டா சமந்தா மீது காதல் வயப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார். 


அதுமட்டுமல்லாது "சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும், ஸ்ரீநகரில் ஒரே அறையில் தங்கி கூத்தடித்து வருவது போன்று" எனக் குறிப்பிட்டு அவர் போட்டுள்ள இந்தப் பதிவானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement