விஜய்தேவர்கொண்டாவின் லைகர் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியாச்சு-எத்தணை மணி நேரத் திரைப்படம் தெரியுமா?

நடிகர் விஜய்தேவர்கொண்டாவின் அதிரடி ஆக்சன் கலந்த நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லைகர்.இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.ம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்