• Mar 28 2024

விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடிக்குத் திருமணம் முடிந்ததா... இணையத்தில் காட்டுத் தீ போல் பரவும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து ரீல் ஜோடி என்றால் அது நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி தான். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருந்தன. 


இவ்விரண்டு படங்களின் உடைய வெற்றிக்கு இவர்களது கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணம் ஆகும். மேலும் இப்படங்கள் வெளியாகியமையைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானதால், இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான் என்றே நெட்டிசன்கள் பலரும் உறுதி செய்துவிட்டனர். 


அத்தோடு சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் ஜோடியாக மாலத்தீவு சென்றதாக கூறப்பட்டு வந்தது. இவ்வாறு இவர்கள் குறித்து தொடர்ந்து பல வதந்திகள் செய்திகள் வடிவில் வெளிவந்த வண்ணம் தான் இருந்தன.

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அடிக்கடி அதிகளவில் கிசுகிசுக்கள் பரப்பப்பட்டு வருவதாக ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் மிகவும் எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். 


அப்பதிவில் சினிமா வட்டாரத்தில் தான் நட்புடன் பழகுவதையும் சிலர் தவறாக சித்தரித்து வருவதாகவும் குறிப்பிட்டு கூறி இருந்தார். 

இந்நிலையில் தற்போது மறுபடியும் நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் மணக்கோலத்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது அவர்களது உண்மையான திருமண புகைப்படம் என நினைத்து வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். 

ஆனால் அது அவர்களின் உண்மையான புகைப்படம் அல்ல. அது ஒரு எடிட் செய்த புகைப்படம் ஆகும். அது தெரியாமல் பலரும் அதனை ஷேர் செய்து வைரலாக்கி வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement