• Apr 25 2024

'LEO' லுக்கில் மாஸாக வரும் விஜய்..சென்னைக்கு திரும்பிய தளபதி.! வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


 S.லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.


இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது விஜய் மீண்டும் சென்னைக்கே திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறுவதற்கு முன்பு அங்கு நின்று இருந்த துப்புரவு பணியாளர்களை அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் தளபதி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 



Advertisement

Advertisement

Advertisement