• Apr 19 2024

கோர விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி மேலதிக சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளாராம்- தகவலை வெளியிட்ட பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.தொடர்ந்து பல பாடல்களைப் பாடி இருக்கும் இவரை் தற்பொழுது நடிகராகவும் வலம் வருகின்றார்.அந்த வகையில் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நசைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைக்காரன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் , மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார் விஜய் ஆண்டனி. அப்போது லங்கா தீவில் கடலுக்குள் இயக்கப்படும் ஸ்கை ஜெட் வாகனத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் பல காயமடைந்தார்


நடிகை காவ்யா தாப்பர் எந்த காயமும் இன்றி தப்பினார். இதில் விஜய் ஆண்டனியின் வாய்ப் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் நேற்று கோலாலம்பூர் சென்றனர்.லங்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனியை அவரது குடும்பத்தினர் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விஜய் ஆண்டனிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த தகவல் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


லங்காவில் தீவில் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் விஜய் ஆண்டனி ஜெட் ஸ்கை வாகனத்தை இயக்கிய போது அந்த வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனிடைய பிரபல படத் தயாரரிப்பாளரான தனஞ்செயன் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து கூறியுள்ளார்.


 அதில் விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார் என்றும், லங்காவில் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காப்பில் அவர் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு துணையாக அவரது குடும்பத்தினர் உள்ளதாகவும், அவரை சென்னைக்கு அழைத்து வருவது குறித்து அவரது குடும்பத்தினர் தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் என்றும் தனஞ்செயன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement