• Apr 24 2024

400 கோடி பட்ஜெட்டில் முதல் முறையாக நடிக்கும் விஜய்- இயக்குநர் யார் தெரியுமா?- தளபதி 68 இன் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதோடு தில் ராஜு இப்படத்தை தயாரிக்கின்றார். அத்தோடு இப்படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதனை அடுத்து லோகேஷ் கனகராஜுடன் இணைநடது தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் இவர்கள் இருவரும் இணையும் படம் இது என்பதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


 வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின்னர் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை அடுத்து இயக்குநர் அட்லியுடன் இணைந்து தளபதி 68 என்னும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி என்றும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.150 கோடி சம்பளமும், இயக்குநர் அட்லிக்கு ரூ.50 கோடி சம்பளமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement